தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக முன்னணி வீரருக்கான விஸ்டன் விருது விராட் கோலிக்கு அறிவிப்பு!
கடந்த ஆண்டுக்கான முன்னணி வீரர்களுக்கான விஸ்டன் விருதுகள் இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோருக்கு...


கடந்த ஆண்டுக்கான முன்னணி வீரர்களுக்கான விஸ்டன் விருதுகள் இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2018-ம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய 5 வீரர்களுக்கு விஸ்டன் விருதும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி, ஜாஸ் பட்லர், சாம் கரண், ராரி பர்ன்ஸ், டம்மி பியாமாண்ட் ஆகியோர் இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ளார்கள். சிறந்த முன்னணி டி20 வீரருக்கான விருது ரஷித் கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த முன்னணி வீரருக்கான விருதைக் கடந்த இரு வருடங்களாகப் பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது முறையாகவும் பெறவுள்ளார் கோலி. 2018-ம் வருடம் அனைத்து வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் 2735 ரன்களை அவர் எடுத்துள்ளார்.
1889 முதல் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதை விஸ்டன் நிறுவனம் வழங்கி வருகிறது.
விராட் கோலி பெற்றுள்ள விருதுகள்
சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது 2011-12, 2014-15, 2015-16, 2016-17, 2017-18
அர்ஜூனா விருது 2013
பத்ம ஸ்ரீ 2017
ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது 2018
சர் கேர்ஃபீல்ட் சோபர்ஸ் விருது 2017, 2018
சிறந்த முன்னணி வீரருக்கான விஸ்டன் விருது 2016, 2017, 2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...