மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

11 வருட சர்வதேசப் பயணம்: விராட் கோலி நெகிழ்ச்சிப் பதிவு

தனது 11 வருட சர்வதேச கிரிக்கெட் பயணம் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி (30) நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2019, 7:42 am

Raghavendran

தனது 11 வருட சர்வதேச கிரிக்கெட் பயணம் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி (30) நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி இலங்கைக்கு எதிராக சர்வதேசப் போட்டிகளில் விராட் கோலி அறிமுகமானார். இதையடுத்து 2019, ஆகஸ்ட் 18-ஆம் தேதியுடன் 11 வருடங்களைக் கடந்துள்ளார். இதை நினைவுபடுத்தும் விதமாக விராட் கோலியின் இந்தப் பதிவு அமைந்துள்ளது.

Story image

''இதே நாளில் 2008-ஆம் ஆண்டு டீன் ஏஜில் சர்வதேச அரங்கில் அறிமுகமாகி 2019-ஆம் ஆண்டுன் 11 வருடங்களை கடந்துவிட்டேன். கடவுளிடம் இருந்து இத்தனை பெரிய ஆசிர்வாதம் கிடைக்கும் என கனவு கூட கண்டதில்லை. நீங்கள் அனைவரும் சரியான பாதையில் சென்று பெரும் வெற்றி பெற அனைத்து சக்திகளும் கிடைக்க எனது வாழ்த்துகள்'' என்று விராட் கோலி பதிவிட்டுள்ளார்.  

Story image

முதல் போட்டியில் வெறும் 12 ரன்களில் ஆட்டமிழந்த கோலி, 2009 முதல் தான் சதமடிக்க தொடங்கினார். ஆனால், தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 43 சதங்களுடன் 2-ஆம் இடத்தில் உள்ளார். 

டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள கோலி, பல சாதனைகளை படைத்து வருகிறார். அவ்வகையில், 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் குவித்த ஒரே வீரர் என்ற தனித்துவம் மிக்க சாதனையை சமீபத்தில் படைத்தார். 

டெஸ்ட் போட்டிகளில் 2011-ஆம் ஆண்டும், டி20-யில் 2010-ஆம் ஆண்டிலும் அறிமுகமான விராட் கோலி, இதுவரை 239 ஒருநாள் போட்டிகளில் 11,520 ரன்களும், 77 டெஸ்ட் போட்டிகளில் 6,613 ரன்களும், 70 டி20-யில் 2,369 ரன்களும் குவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.