ஷுப்மன் கில் திறமையில் 10% கூட எனக்கு அப்போது இல்லை: வியக்கும் விராட் கோலி!
வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில் பேட்டிங் செய்ததைப் பார்த்தேன். உடனே வியந்துபோனேன்...


19 வயது ஷுப்மன் கில் இந்திய அணிக்குத் தேர்வானது நமக்கு மட்டுமல்ல, இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதில் தொடர் நாயகன் பட்டம் வென்று அசத்தினார் ஷுப்மன் கில். இதுவரை அவர் விளையாடியுள்ள 7 ரஞ்சி ஆட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு அரை சதமாவது எடுத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இதுவரை விளையாடிய 9 முதல்தர ஆட்டங்களிலும் தலா ஒரு அரை சதம் எடுத்து அசத்தியுள்ளார். 9 ஆட்டங்களில் 3 சதங்களும் 7 அரை சதங்களும் எடுத்துள்ளார். இந்த வருடம் 5 ரஞ்சி ஆட்டங்களில் விளையாடி 2 சதங்கள் 4 அரை சதங்களுடன் 728 ரன்கள் எடுத்துள்ளார். தமிழகத்துக்கு எதிராக 268 ரன்களும் ஹைதராபாத்துக்கு எதிராக 148 ரன்களும் எடுத்து அதிகக் கவனம் ஈர்த்தார். இதையடுத்து நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலுக்குப் பதிலாகத் தேர்வானார்.
இந்நிலையில், எந்த விமரிசனமும் இல்லாமல், ஷுப்மனின் திறமையை மனம் திறந்து பாராட்டியுள்ளார் விராட் கோலி. 3-வது ஒருநாள் ஆட்டம் முடிந்தபிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய கோலி, ஷுப்மன் கில் குறித்துக் கூறியதாவது:
வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில் பேட்டிங் செய்ததைப் பார்த்தேன். உடனே வியந்துபோனேன். நான் அவருடைய வயதில் (19) 10 சதவிதம் கூட அதுபோல விளையாடவில்லை என்று மெச்சியுள்ளார் கோலி.
இதையடுத்து அடுத்த இரு ஒருநாள் ஆட்டங்களில் கோலிக்குப் பதிலாக ஷுப்மன் கில் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த ஆட்டத்துடன் கேப்டன் விராட் கோலி, நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார். கடைசி இரு ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் அவர் பங்கேற்கமாட்டார். இதையடுத்து மீதமுள்ள ஆட்டங்களுக்கு ரோஹித் சர்மா கேப்டனாகச் செயல்படுவார். 4-வது ஒருநாள் ஆட்டம் வரும் 31 அன்று ஹேமில்டனில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...