விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மே.இ.தீவுகள் தொடர்: இந்திய அணி தேர்வு திடீரென ஒத்திவைப்பு

ஆகஸ்ட் மாதம் இந்திய-மே.இ.தீவுகள் இடையே அமெரிக்கா மற்றும் மே.இ.தீவுகளில் தலா 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் நடக்கின்றன. 

News image
Updated On :19 ஜூலை 2019, 2:35 am

Raghavendran

ஆகஸ்ட் மாதம் இந்திய-மே.இ.தீவுகள் இடையே அமெரிக்கா மற்றும் மே.இ.தீவுகளில் தலா 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் நடக்கின்றன. 

ஒருநாள் தொடர் ஆக. 3-இல் தொடங்குகிறது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் ஆக. 22-இல் தொடங்குகிறது. 

முதலில் 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ப்ரோவார்ட் கௌன்டி மைதானத்தில் ஆகஸ்டு 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முதல் இரு போட்டிகளும், கயானாவில் ஆகஸ்டு 6-ஆம் தேதி 3-ஆவது போட்டியும் நடைபெறவுள்ளது.

பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஆகஸ்டு 8-ல் கயானாவிலும், 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ட்ரினிடட்டிலும் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆண்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்டு 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், ஜமைக்காவின் சபைனா பார்க்கில் ஆகஸ்டு 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை 2-ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. 

இதற்கான அணியை தேர்வு செய்ய மத்திய தேர்வாளர் குழு ஜூலை 19-ஆம் தேதி மும்பையில் கூட உள்ளதாக பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி தேர்வு திட்டமிட்டபடி நடைபெறாது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.