ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பிரெஞ்சு ஓபன்: அரையிறுதியில் ஃபெடரர் - நடால் மோதல்!

ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டம் விரைவில் நடைபெறவுள்ளது..

News image
Updated On :5 ஜூன் 2019, 5:32 am

எழில்

ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டம் விரைவில் நடைபெறவுள்ளது.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் போட்டியில், காலிறுதி ஆட்டங்களில் ஃபெடரரும் நடாலும் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள்.

காலிறுதி ஆட்டத்தில், நடால் 6-1, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் நிஷிகோரியைத் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 51 நிமிடங்கள் நடைபெற்றது. 

37 வயது ஃபெடரர், 7-6 (7/4), 4-6, 7-6 (7/5), 6-4 என்கிற செட் கணக்கில் வாவ்ரிங்காவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் கடந்த 28 வருடங்களில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கு நுழைந்த வயதான வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஃபெடரர். இதற்கு முன்பு, 1991 யு.எஸ். ஓபன் போட்டியில் 39 வயது ஜிம்மி கானர்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். 

ஃபெடரருக்கு எதிரான ஆட்டங்களில் 23-15 என அதிக ஆட்டங்களில் வென்று முன்னிலை பெற்றுள்ளார் நடால். எனினும் நடாலுக்கு எதிரான கடைசி 5 ஆட்டங்களையும் ஃபெடரரே வென்றுள்ளார். அதேசமயம் களிமண் தரையில் நடால் 13-2 என முன்னிலை பெற்றுள்ளார். பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருவரும் 5 முறை மோதி, அனைத்திலும் வென்றுள்ளார் நடால். கடைசியாக 2011-ல் இருவரும் மோதினார்கள். இதனால் அரையிறுதி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.