நியூஸிலாந்தில் 2 டெஸ்டுகள், 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடவுள்ள இந்திய அணி: அட்டவணை வெளியீடு!
நியூஸிலாந்தில், அடுத்த வருட ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், 2 டெஸ்டுகள், 3 ஒருநாள், 5 டி20 தொடர்களில்...


இந்திய கிரிக்கெட் அணி அடுத்த வருட ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதற்கான ஆட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு வருடத்துக்கான நியூஸிலாந்தின் உள்ளூர் சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் முதல் மார்ச் வரை இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆடவர் அணிகளும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும் நியூஸிலாந்தில் விளையாடவுள்ளன.
நியூஸிலாந்தில், அடுத்த வருட ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், 2 டெஸ்டுகள், 3 ஒருநாள், 5 டி20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. ஜனவரி 24 முதல் பிப்ரவரி 2 வரை டி20 தொடரும் பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 11 வரை ஒருநாள் தொடரும் பிப்ரவரி 21 முதல் மார்ச் 4 வரை டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடருக்கு முன்பு - டிசம்பர் 6 வரை 22 வரை மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. பிறகு ஜனவரி 5 முதல் 10 வரை ஜிம்பாப்வே அணி, இந்தியாவில் 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது. ஜனவரி 19 அன்று ஆஸ்திரேலியா தொடர் நிறைவடைகிறது. இதற்குப் பிறகு இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. எனினும் இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்துக்கும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள முதல் டி20 ஆட்டத்துக்கும் இடையே 4 நாள்கள் இடைவெளி மட்டுமே உள்ளன.
அதேபோல நியூஸிலாந்து தொடர் மார்ச் 4 அன்று நிறைவடைகிறது. இதன்பிறகு இந்திய அணி இந்தியாவில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மார்ச் 18 அன்று ஒருநாள் தொடர் நிறைவடைகிறது. இதன்பிறகு இரு வாரங்கள் கழித்து ஐபிஎல் 2020 தொடங்கவுள்ளது.
இந்தியாவின் நியூஸிலாந்துச் சுற்றுப்பயணம்
ஜனவரி 24: முதல் டி20, ஆக்லாந்து
ஜனவரி 26: 2-வது டி20, ஆக்லாந்து
ஜனவரி 29: 3-வது டி20, ஹாமில்டன்
ஜனவரி 31: 4-வது டி20, வெல்லிங்டன் (வெஸ்ட்பாக்)
பிப்ரவரி 2: 5-வது டி20, மெளண்ட் மெளன்கானி
பிப்ரவரி 5: முதல் ஒருநாள், ஹாமில்டன்
பிப்ரவரி 8: 2-வது ஒருநாள், ஆக்லாந்து
பிப்ரவரி 11: 3-வது ஒருநாள், மெளண்ட் மெளன்கானி
பிப்ரவரி 21- பிப்ரவரி 25: முதல் டெஸ்ட், வெல்லிங்டன் (பேசின் ரிசர்வ்)
பிப்ரவரி 29- மார்ச் 4: 2-வது டெஸ்ட், கிறிஸ்ட்சர்ச்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...