என்னைப் பிரதிபலிக்கும் இளம் வீரர் இவர் தான்: யுவ்ராஜ் சிங்
நேற்று ஓய்வு அறிவிப்பை யுவ்ராஜ் சிங் வெளியிட்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசினார்...


இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை உள்பட பல்வேறு வெற்றிகளுக்கு வித்திட்ட யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று ஓய்வு அறிவிப்பை யுவ்ராஜ் சிங் வெளியிட்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உங்களைப் பிரதிபலிக்கும் வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு யுவ்ராஜ் சிங் அளித்த பதில்:
என்னை அப்படியே பிரதிபலிக்காமல் போனாலும் இன்னும் சிறந்த வீரராக வரக்கூடியவர் இவர் என நினைக்கிறேன். ரிஷப் பந்த். ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் இரண்டு டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். மிகவும் அதிரடி வீரராக, ஆட்டத்தில் தன்னுடைய அணிக்கு வெற்றி தேடித்தரும் இடக்கை வீரராக வளரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அடுத்தச் சில வருடங்களில் அவரை நான் கண்காணிக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...