சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

டிஎன்பிஎல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 

சமீபத்தில் நிறைவு பெற்ற டிஎன்பிஎல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

News image
தமிழ்நாடு ப்ரீமியர் லீக்
Updated On :31 ஜனவரி 2024, 10:16 am

DIN

சென்னை: சமீபத்தில் நிறைவு பெற்ற டிஎன்பிஎல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் முடிந்த தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வென்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அதேசமயம் டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களைச் சூதாட்டத் தரகர்கள் அணுகியதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இதுகுறித்த விசாரணையை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. டிஎன்பிஎல் போட்டிக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் உண்மையில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐயிடமிருந்து எவ்வித தகவலும் வரவில்லை என்றும் டிஎன்சிஏ சார்பில் முதலில் கூறப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து விசாரிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டது

இந்நிலையில் சமீபத்தில் நிறைவுபெற்ற டிஎன்பிஎல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் அமைக்கப்பட்ட குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது

டிஎன்பிஎல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது

டிஎன்பிஎல் நம்பகத்தன்மையை காக்க சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.