கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அபார பேட்டிங் & பந்துவீச்சு: வலுவான நிலையில் இந்திய ஏ அணி!

இந்திய ஏ அணித் தரப்பில் நதீம், குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். 

News image
Updated On :18 செப்டம்பர் 2019, 12:22 pm

எழில்

இந்திய-தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 417 ரன்கள் எடுத்துள்ளது.

மைசூரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் இந்திய ஏ அணி, 74 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 78, சஹா 36 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய ஏ அணி, 417 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. ஷுப்மன் கில் 92, கருண் நாயர் 78, சஹா 60, ஷிவம் டுபே 68, ஜலஜ் சக்ஸேனா 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. ஏ தரப்பில் முல்டர், பீடிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 2-ம் நாளின் முடிவில் 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. கேப்டன் மார்க்ரம் 83, முல்டர் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்கள். அந்த அணிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், 258 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய ஏ அணித் தரப்பில் நதீம், குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.