கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஒரு பந்தைத் தவறவிட்டாலும் தோனி போல வராது எனக் கூறிவிடுவார்கள்: கே.எல். ராகுல்

தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராகச் செயல்படுவதில் அதிக அழுத்தங்கள் உள்ளன என கே.எல். ராகுல் கூறியுள்ளார்...

News image
Updated On :27 ஏப்ரல் 2020, 10:08 am

DIN

தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராகச் செயல்படுவதில் அதிக அழுத்தங்கள் உள்ளன என கே.எல். ராகுல் கூறியுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் நான் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்து வருவதை கிரிக்கெட் விளையாட்டைப் பின்தொடர்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே விக்கெட் கீப்பிங் பணிகளில் தொடர்ந்து நான் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். அணிக்குத் தேவையான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.

மக்களின் எதிர்பார்ப்புகளால் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது அழுத்தத்தை உணர்ந்தேன். ஒரு பந்தைத் தவறவிட்டாலும் தோனி போல வராது என்று மக்கள் கூறிவிடுவார்கள். தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராகச் செயல்படுவதில் அதிக அழுத்தங்கள் உள்ளன. மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார். 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.