ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த கொள்கை ரீதியில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று நிறைவடைகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.
இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் அணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு அணிக்கும் பிசிசிஐ அனுப்பியுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த கொள்கை ரீதியில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அனுமதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



