விசிலடித்து தோனியை உற்சாகப்படுத்திய ரெய்னா: சிஎஸ்கே பயிற்சி முகாம் விடியோ வெளியீடு

பயிற்சி முகாமின் விடியோ தொகுப்பை சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி வெளியிட்டுள்ளது.
விசிலடித்து தோனியை உற்சாகப்படுத்திய ரெய்னா: சிஎஸ்கே பயிற்சி முகாம் விடியோ வெளியீடு

கடந்த ஒரு வாரமாக சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமின் விடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

செப்டம்பர் 19 அன்று ஐபிஎல் போட்டி தொடங்குவதால் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல ஆரம்பித்துள்ளன. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகளின் வீரர்கள் இன்று துபைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள். 

தோனி, ரெய்னா, ஜடேஜா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று துபைக்குச் சென்றுள்ளார்கள். இரு வருடங்களுக்கு முன்பு ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வென்றது. கடந்த முறை நூலிழையில் கோப்பையைத் தவறவிட்டது. எனவே, இந்தமுறை சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் உள்ளார்கள்.

கடந்த ஒரு வாரமாக சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தோனி, ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டார்கள். பயிற்சி முகாமின் விடியோ தொகுப்பை சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி வெளியிட்டுள்ளது. பயிற்சியின்போது தோனி சிக்ஸர் அடிக்க, விசில் அடித்து ரெய்னா உற்சாகப்படுத்தும் காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chennai Super Kings (@chennaiipl) on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com