இன்று 600-வது விக்கெட்டை எடுத்து உலக சாதனை படைப்பாரா ஜேம்ஸ் ஆண்டர்சன்?
வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பெருமை ஆண்டர்சனுக்கு உண்டு.


இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 599 விக்கெட்டுகள் எடுத்து உலக சாதனை படைக்கும் நிலையில் உள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பெருமை ஆண்டர்சனுக்கு உண்டு. ஆண்டர்சன் 599 விக்கெட்டுகளும் மெக்ராத் 563 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இதுவரை 6 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் 599 விக்கெட்டுகளுடன் புதிய உலக சாதனை படைக்கும் நிலையில் உள்ளார் ஆண்டர்சன்.
மழை காரணமாக நேற்றைய ஆட்டத்தில் 56 ஓவர்களே வீசமுடிந்தது. இல்லாவிட்டால் நேற்றே 600-வது விக்கெட்டை எடுத்து உலக சாதனை படைத்திருக்க வாய்ப்புண்டு.
இன்று அவர் 600-வது விக்கெட்டை எடுத்தால், இந்த இலக்கை எட்டிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெறுவார்.
இது ஆண்டர்சன் விளையாடும் 156-வது டெஸ்ட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...