17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானவர்: ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் பார்தீவ் படேல்!

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானவர்: ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் பார்தீவ் படேல்!

17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பார்தீவ் படேல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2002-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் பார்தீவ் படேல். இந்திய அணிக்காக 25 டெஸ்டுகள், 38 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2018-ல் ஜோகன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி  வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் இந்திய அணிக்காகக் கடைசியாக இடம்பெற்றார். டெஸ்டில் ஆறு அரை சதங்கள் எடுத்துள்ளார். 

2002 யு-19 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். இந்திய ஏ அணிக்காக விளையாடியவர் அடுத்ததாக இந்திய அணியிலும் இளம் வயதில் இடம்பெற்றார். இவருடைய ஆரம்ப காலத்தில் இந்திய அணி விளையாடிய 20 டெஸ்டுகளில் 19-ல் பார்தீவ் படேலுக்கு இடம் கிடைத்தது. விக்கெட் கீப்பிங்கில் செய்த தவறுகளும் தினேஷ் கார்த்திக், தோனி ஆகியோரின் வருகையும் இவருடைய வாய்ப்புகள் குறையக் காரணமாகின. 

சிஎஸ்கே அணி 2010-ல் மற்றும் மும்பை அணி 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் பட்டங்கள் வென்றபோது அந்த அணிகளில் பார்தீவ் படேல் இடம்பெற்றிருந்தார். 2017-ல் மும்பை அணியில் அதிக ரன்கள் (395) எடுத்தார். ஐபிஎல் போட்டியில் ஆறு அணிகளில் விளையாடியுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்த போதும் ஓர் ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானதால் இந்திய அணிக்காக விளையாடிய 4-வது இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com