திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார் பார்தீவ் படேல்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பார்தீவ் படேல், மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

News image
Updated On :11 டிசம்பர் 2020, 11:20 am IST

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பார்தீவ் படேல், மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பார்தீவ் படேல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். 

சிஎஸ்கே அணி 2010-ல் மற்றும் மும்பை அணி 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் பட்டங்கள் வென்றபோது அந்த அணிகளில் பார்தீவ் படேல் இடம்பெற்றிருந்தார். 2017-ல் மும்பை அணியில் அதிக ரன்கள் (395) எடுத்தார். ஐபிஎல் போட்டியில் ஆறு அணிகளில் விளையாடியுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்த போதும் ஓர் ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்நிலையில் ஓய்வு பெற்றுள்ள பார்தீவ் படேல், மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது இணைந்துள்ளார். திறமைகளைக் கண்டறியும் குழுவில் ஒருவராக பார்தீவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 11,240 ரன்கள் எடுத்துள்ள பார்தீவ் படேலுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் ஏராளமான அனுபவம் உண்டு. இதனால் திறமையான உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைக் கண்டறிந்து தேர்வு செய்யும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.