திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

முதல் ஒருநாள் தோல்வி: இந்திய அணிக்கு கங்குலி ஆறுதல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த இரு ஆட்டங்களும் பரபரப்பாக அமையும். மிகவும் வலுவான அணி நம்முடையது.

News image
Updated On :17 ஜனவரி 2020, 4:56 am

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்க இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்று வருகிறது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. ஃபிஞ்ச் - வார்னர் ஆகிய இருவரும் அபார சதமடித்து வெற்றிக்கு வித்திட்டனா். 1--0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி ட்விட்டரில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அது அமைந்துள்ளது. அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த இரு ஆட்டங்களும் பரபரப்பாக அமையும். மிகவும் வலுவான அணி நம்முடையது. ஒருநாள் மட்டும் சரியாக விளையாடவில்லை. இதற்கு முன்னால் இதுபோன்ற நிலைமையில் இருந்து, 0-2 என இருந்து தொடரை வென்றுள்ளார்கள். இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.