தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரோஹித் சர்மா புதிய மைல்கல்: கங்குலியைப் பின்னுக்குத் தள்ளி அபாரம்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9000 ரன்கள் என்ற மைல்கல்லை ரோஹித் சர்மா எட்டியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஜனவரி 2020, 1:15 pm

DIN


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9000 ரன்கள் என்ற மைல்கல்லை ரோஹித் சர்மா எட்டியுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து, வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்த இன்னிங்ஸின் இரண்டாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 

இதன்மூலம் குறைந்த இன்னிங்ஸில் 9000 ரன்களை எட்டிய வீரர்கள் வரிசையில் கங்குலியைப் பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

குறைந்த இன்னிங்ஸில் 9000 ரன்களை எட்டிய வீரர்கள்:

விராட் கோலி - 194 இன்னிங்ஸ்

ஏபி டி வில்லியர்ஸ் - 205 இன்னிங்ஸ்

ரோஹித் சர்மா - 217 இன்னிங்ஸ்

சௌரவ் கங்குலி - 228 இன்னிங்ஸ்

சச்சின் டெண்டுல்கர் - 235 இன்னிங்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.