கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தோனி பிறந்த நாள்: கோலி, சாஸ்திரி வாழ்த்து

ஒரு சிறந்த மனிதனாக வாழ்வது எப்படி என்று எனக்குக் கற்றுக்கொடுத்தவர்...

News image
Updated On :7 ஜூலை 2020, 10:05 am

DIN

இந்திய அணி வீரர் எம்எஸ் தோனி, தனது 39-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள். பிசிசிஐயும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் தோனியின் அதிரடி சிக்ஸர்களின் விடியோக்களை வெளியிட்டுள்ளன. தோனி ஆஸ்திரேலியாவில் அடித்த சிக்ஸர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ட்விட்டரில் கோலி கூறியதாவது:

பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் எப்போதும் அமையட்டும். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது: 

பிறந்த நாள் வாழ்த்துகள் இளம் வீரரே! சிறப்பாகக் கொண்டாடுங்கள் என்று வாழ்த்தியுள்ளார். 

ஒரு சிறந்த மனிதனாக வாழ்வது எப்படி என்று எனக்குக் கற்றுக்கொடுத்தவர். என்னுடைய கடினமான நேரங்களில் எனக்கு ஆதரவாக இருந்தவர் என்று பிறந்து நாள் வாழ்த்துகளுடன் தோனியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் ஹார்திக் பாண்டியா.

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார். 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.