கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தோனியின் திட்டங்களை அப்படியே பின்பற்றினால் போதும்: ரிஷப் பந்த்

அவருடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு அடிக்கடி கிடைப்பதில்லை...

News image
Updated On :15 ஜூலை 2020, 8:41 am

DIN

பேட்டிங்கில் தன்னுடைய சிறந்த இணை தோனி தான் என இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

தில்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணியுடனான இணைய உரையாடலில் ரிஷப் பந்த் கூறியதாவது:

பேட்டிங்கில் என்னுடைய சிறந்த இணை தோனி தான். ஆனால் அவருடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு அடிக்கடி கிடைப்பதில்லை. அவர் ஆடுகளத்தில் இருந்தால் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும். தன்னுடைய திட்டங்களை நம்மிடம் கூறுவார். அதை அப்படியே பின்பற்றினால் போதும். இலக்கை விரட்டும் போது அவர் மூளை அபாரமாக வேலை செய்யும். 

விராட் கோலி, ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதும் நன்றாக இருக்கும். இவர்களைப் போன்ற மூத்த வீரர்களுடன் விளையாடும்போது வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். அவர்களுடைய எண்ண ஓட்டம் எப்படி உள்ளது எனக் கவனிக்கலாம். இது ஒரு தனி உணர்வு என்றார். 

22 வயது பந்த் இதுவரை 13 டெஸ்டுகள், 16 ஒருநாள், 28 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.