திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகிறாரா இங்கிலாந்து முன்னாள் கேப்டன்?

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் நியமிக்கப்பட உள்ளதாக...

News image

படம் - ஏஎஃப்பி

Updated On :18 ஜூன் 2020, 3:32 pm IST

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் அப்பதவியிலிருந்து சமீபத்தில் விலகினார். இதையடுத்து நிக் ஹாக்லி அப்பதவிக்குத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் வருமான இழப்பைச் சந்தித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இதையடுத்து 40 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. 2016 முதல் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ள கிரீம் ஹிக்கையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2015 முதல் 2018 வரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநராக இருந்த ஆண்ட்ரூ ஸ்டிராஸ், தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கு விண்ணபிக்க வேண்டும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கி ஆஷஸ் வெற்றிகளை ஸ்டிராஸ் பெற்றுள்ளதால் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்புக்குத் தலைமை தாங்க சர்வதேச அளவில் தேடுதல் வேட்டை நடைபெறும் என சிஏ-வின் சேர்மன் ஏர்ல் எட்டிங்ஸ் கூறியுள்ளார்.

ஆண்ட்ரூ ஸ்டிராஸ் இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்டுகளில் விளையாடி 7037 ரன்கள் எடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.