ஒலிம்பிக்ஸுக்கு டி10 கிரிக்கெட் தான் பொருத்தமானது என இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து கேப்டன் இயன் மார்கன் கூறியுள்ளார்.
ஐந்து நாள் கிரிக்கெட், 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக வேறொரு வடிவம் எடுத்தது. பிறகு டி20 கிரிக்கெட், ஆரம்பித்த வேகத்தில் ஜெட் வேகத்தில் வளர்ச்சியடைந்தது. இந்த மாற்றங்களால் கிரிக்கெட்டில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகள் கிடைத்தன. இப்போது 10 ஓவர் கிரிக்கெட் அமலுக்கு வந்துள்ளது. எனினும் தற்போது லீக் அளவில் மட்டுமே விளையாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒரு பேட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் கூறியதாவது:
ஒலிம்பிக்ஸ் மற்றும் காமன்வெல்த் கேம்ஸ் போன்றவற்றுக்கு டி10 கிரிக்கெட் பொருத்தமானதாக இருக்கும். மற்ற வகை கிரிக்கெட்டை விடவும் டி10 இந்த வாய்ப்பை வழங்குகிறது. ஒட்டு மொத்த போட்டியையும் 10 நாள்களில் முடித்துவிடலாம்.
இதன்மூலம் கிரிக்கெட்டுக்குக் கூடுதலான வாய்ப்புகள் கிடைக்கும். 8-10 நாள்களில் முடிவடைகிற போட்டி தான் எல்லாவற்றுக்கும் ஏற்றவாறு இருக்கும். மேலும் அதிக பொழுதுபோக்கையும் ரசிகர்களுக்கு அளிக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த வருடத்துக்கான அபுதாபி டி10 லீக் போட்டி நவம்பர் 19 முதல் 28 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபி டி10 லீக் போட்டியின் ஒவ்வொரு ஆட்டங்களும் 90 நிமிடங்கள் நடக்கும். 10 ஓவர்கள் மட்டுமே ஓர் அணிக்கு வழங்கப்படும். 2019-ல் நடைபெற்ற டி10 லீக் போட்டியை டுவைன் பிராவோ தலைமையிலான மராத்தா அராபியன்ஸ் அணி வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை: அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவு மசோதா நகல் வெளியீடு!

திமுகவில் ஊழலுக்காக பதவி ராஜிநாமா! மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்!

ராத்து ராசன் பாடல்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


