கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அவனுக்கு அப்படியொன்னும் வயசாகலை: வெள்ளைத் தாடி புகைப்படம் பற்றி தோனியின் தாய்

தோனியின் புதிய தோற்றத்தை நானும் பார்த்தேன். அவனுக்கு அப்படியொன்னும் வயசாகவில்லை.

News image
Updated On :12 மே 2020, 10:15 am

DIN

ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் மகளுடன் தோனி விளையாடும் விடியோ இன்ஸ்டகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியானது. அதில் வெள்ளைத் தாடியுடன் தோனி இருந்ததைக் கண்டு பலரும் அதிர்ச்சியானார்கள். 15 வயது கூடுதலாகத் தெரிகிறார் என்று சமூகவலைத்தளங்களில் இதற்கு எதிர்வினையாற்றினார்கள்.

இதுபற்றி தோனியிடம் தாய் தேவகி தேவியிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. வெள்ளைத் தாடியுடன் தனது மகன் தோற்றமளிப்பது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

தோனியின் புதிய தோற்றத்தை நானும் பார்த்தேன். அவனுக்கு அப்படியொன்னும் வயசாகவில்லை. எந்தத் தாய்க்கும் மகன் வயதானவனாகத் தெரிய மாட்டான் எனக் கூறியுள்ளார்.

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார். 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.