கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தோனி ஓய்வா?: கொந்தளித்த சாக்‌ஷி!

வாழ்க்கையில் உருப்படியாக ஏதாவது செய்யுங்கள் என்றார். எனினும் சில நிமிடங்கள் கழித்து அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார்...

News image
Updated On :28 மே 2020, 5:31 am

DIN

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல வீரர் தோனி ஓய்வு பெற்றுவிட்டதாக வெளியான வதந்திகளுக்கு அவருடைய மனைவி சாக்‌ஷி பதில் அளித்த நிலையில் சில நிமிடங்கள் கழித்து தன்னுடைய ட்வீட்டை அவர் நீக்கிவிட்டார்.

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார். 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் ட்விட்டர் தளத்தில் தோனிரிடையர்ஸ் என்கிற ஹேஷ்டேக் ஒன்று டிரெண்ட் ஆகி வந்தது. இதனால் தோனி ஓய்வுபெறவுள்ளதாக ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தோனியின் ஓய்வு பற்றி வதந்தி பரப்புபவர்களுக்குக் காட்டமாகப் பதில் அளித்தார் அவருடைய மனைவி சாக்‌ஷி. அவர் கூறியதாவது:

இது வதந்தி மட்டும்தான். பொதுமுடக்கம் மக்களை மனத்தளவில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கையில் உருப்படியாக ஏதாவது செய்யுங்கள் என்றார். எனினும் சில நிமிடங்கள் கழித்து அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.