கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இங்கிலாந்தில் ஐந்து டெஸ்டுகள் விளையாடும் இந்திய அணி: அட்டவணை வெளியீடு

இங்கிலாந்தில் ஐந்து டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2020, 12:07 pm

DIN

2021-ல் இந்திய அணி இங்கிலாந்தில் ஐந்து டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இந்திய அணி இங்கிலாந்தில் ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டிங்கம்-மில் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கும் டெஸ்ட் தொடர், செப்டம்பர் 14-ல் மான்செஸ்டரில் நிறைவடைகிறது.

2021-ல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் ஆட்டங்களுக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூன் மாதம் இலங்கை அணி மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. பிறகு ஜூலையில் பாகிஸ்தான் அணி தலா 3 ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன்பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. 

ஜூன் மாதம் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் ஒரு டெஸ்டிலும் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. எனினும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிச்சுற்று குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படாததால் அது தொடர்பான அட்டவணை தற்போது வெளியிடப்படவில்லை. அட்டவணையில் இடம்பெற்றுள்ள தொடர்களுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட், ஆகஸ்ட் 4-8: நாட்டிங்கம்
2-வது டெஸ்ட், ஆகஸ்ட் 12-16: லார்ட்ஸ்
3-வது டெஸ்ட், ஆகஸ்ட் 25-29: லீட்ஸ்
4-வது டெஸ்ட்: செப்டம்பர் 2-6: தி ஓவல்
5-வது டெஸ்ட்: செப்டம்பர் 10-14: மான்செஸ்டர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.