கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இன்று முதல் தொடங்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து டி20 தொடர்

ஸ்மித், ஆரோன் ஃபிஞ்ச், வார்னர், மேக்ஸ்வெல், ஸ்டார்க், கம்மின்ஸ், ஸம்பா, அகர் என திறமையான வீரர்களைக் கொண்டு...

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 9:45 am

DIN

இரு பலம் பொருந்திய அணிகளான ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இன்று முதல் தொடங்கும் டி20 தொடரில் மோதுகின்றன.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 1-1 என சமன் செய்தது. 

இதற்கடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகின்றன. டி20 தொடர் செளதாம்ப்டனிலும் ஒருநாள் தொடர் மான்செஸ்டரிலும் நடைபெறவுள்ளன. டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. செப்டம்பர் 4, 6, 8 தேதிகளில் டி20 தொடரும் செப்டம்பர் 11, 13, 16 தேதிகளில் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளன. ஒருநாள் தொடர் உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்மித், ஆரோன் ஃபிஞ்ச், வார்னர், மேக்ஸ்வெல், ஸ்டார்க், கம்மின்ஸ், ஸம்பா, அகர் என திறமையான வீரர்களைக் கொண்டு களமிறங்குகிறது ஆஸ்திரேலிய அணி.  

இங்கிலாந்து அணியில் ஜாஸ் பட்லர் - பேர்ஸ்டோவ் தொடக்க வீரர்களாகக் களமிறங்கவுள்ளார்கள். மொயீன் அலி மீண்டும் சிறப்பாக விளையாடுவது அணிக்குக் கூடுதல் பலத்தைத் தருகிறது.

2005 முதல் இரு அணிகளும் டி20யில் 16 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 9 ஆட்டங்களில் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.

மழை ஆபத்து இல்லாததால் இரு அணிகளும் டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நேரம் இரவு 10.30 இன்றைய ஆட்டம் தொடங்குகிறது. சோனி டிவியில் ஒளிபரப்பாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.