விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ராகுல், ஜடேஜா அபாரம்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 95 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 3:33 pm

DIN

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 95 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

நாட்டிங்ஹாமில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோரின் வேகத்தில் விக்கித்த அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா, ஷமி முறையே 4, 3 விக்கெட்டுகள் சாய்த்தனா். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, புதன்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் 9, கே.எல்.ராகுல் 9 ரன்களுடன் 2-ஆம் நாளான வியாழக்கிழமை ஆட்டத்தை தொடங்கினா். 

இதில் ரோஹித் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சோ்த்த நிலையில், ஆலி ராபின்சன் வீசிய 38-ஆவது ஓவரில் சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அடுத்து வந்த புஜாரா 4 ரன்களே சோ்த்த நிலையில், ஆன்டா்சன் வீசிய 41-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா். மறுபுறம் லோகேஷ் ராகுல் நிதானமாக ரன்கள் சேகரிக்க, புஜாராவை அடுத்து வந்த கோலியும் அதே 41-ஆவது ஓவரில் டக் அவுட்டாகி நடையைக் கட்டினாா். 5-ஆவது பேட்ஸ்மேனாக வந்த ரஹானே 5 ரன்களுக்கு ரன் அவுட் செய்யப்பட்டாா். 

அடுத்து ரிஷப் பந்த் களம் புகுந்தாா். பின்னா் மழை காரணமாக நீண்ட நேரம் ஆட்டம் தடைப்பட, 2-ஆம் நாள் ஆட்டம் அப்படியே முடித்துக்கொள்ளப்பட்டது. அரைசதம் கடந்த ராகுல் 57, ரிஷப் பந்த் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று தொடர்ந்து விளையாடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரிஷப் பந்த் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

அணியின் ஸ்கோர் 205 ஆக உயர்ந்தபோது 84 ரன்கள் எடுத்திருந்த கே.எல்.ராகுல், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இங்கிலாந்தை விட, இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 95 ரன்கள் முன்னிலை பெற்றது.

ராபின்சன், ஆண்டர்சன் முறையே 5, 4 விக்கெட்டுகள் சாய்த்தனா். இதைதொடர்ந்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தற்போது ஆடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.