அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஒவ்வொருவருக்கும் 150 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம்: தினேஷ் கார்த்திக் எந்த அணியைப் புகழ்கிறார்?

ஏராளமான டி20 அனுபவங்களைக் கொண்ட வீரர்கள் உள்ளார்கள். 150 முதல் 200 டி20 ஆட்டங்களில் விளையாடிய...

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 11:42 am

DIN

இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 150 டி20 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் உள்ளது என விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். 

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி பற்றி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

ஐபிஎல் போட்டி கடந்த 14 வருடங்களாக நடைபெறுகிறது. எனவே இந்திய அணியில் ஏராளமான டி20 அனுபவங்களைக் கொண்ட வீரர்கள் உள்ளார்கள். 150 முதல் 200 டி20 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் இந்திய வீரர்களுக்கு உள்ளது. இதனால் முக்கியமான தருணங்களில் இருந்து போதுமான தகவல்களை அவர்கள் பெற்றுள்ளார்கள். பெரிய போட்டிகளில் அழுத்தமான தருணங்களைக் கையாள இந்த அனுபவம் அவசியமாகிறது. எனவே இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. நொடியில் ஆட்டத்தைத் தன் பக்கம் கொண்டு வந்துவிடுவார் பாண்டியா. மெதுவான ஆடுகளங்களில் நன்கு பந்துவீசவும் செய்கிறார்.  நல்ல பீல்டராகவும் உள்ள பாண்டியாவின் ஆட்டத்தைக் காண ஆவலாக உள்ளேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.