இலங்கை கிரிக்கெட்: ஒப்பந்தப் பட்டியலில் பிரபல வீரருக்கு இடமில்லை!

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தப் பட்டியலில் பிரபல வீரர் மேத்யூஸின் பெயர் இடம்பெறவில்லை. 
இலங்கை கிரிக்கெட்: ஒப்பந்தப் பட்டியலில் பிரபல வீரருக்கு இடமில்லை!

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தப் பட்டியலில் பிரபல வீரர் மேத்யூஸின் பெயர் இடம்பெறவில்லை. 

இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அளித்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய இயக்குநர் டாம் மூடி ஆகியோர் 24 கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தினார்கள். புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடற்தகுதியின் அடிப்படையில் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிகிறது, 2019 முதல் சிறப்பாக விளையாடியதற்காக 50 சதவீதமும் உடற்தகுதிக்கு 20 சதவீதமும் தலைமைப்பண்பு, தொழில்முறை, வருங்காலத் திறமை, அணிக்கான பங்களிப்பு ஆகியவற்றுக்காக 10 சதவீதமும் வழங்கப்படும் என வீரர்களுக்கு வழங்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறைக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். வீரர்களுக்குப் புள்ளிகள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதனால் நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என அவர்கள் தெரிவித்தார்கள். பிறகு, புதிய ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டதால் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் இலங்கை வீரர்கள் பங்கேற்றார்கள்.

இந்நிலையில் புதிய ஒப்பந்தத்தை 18 இலங்கை வீரர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். 2021 வரைக்குமான ஒப்பந்தத்தில் புதிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தில் வீரர்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள். இதை அறிந்துகொண்ட பின்னரே வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறிய காரணத்துக்காக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு இலங்கைக்குத் திரும்பினார்கள். இம்மூவருடன் சேர்த்து பிரபல வீரர் மேத்யூஸின் பெயரும் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. இலங்கை அணிக்குத் தேர்வாக மேத்யூஸ் தயாராக இல்லாததால் ஒப்பந்தத்தில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com