தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கோலிக்குப் பதில் ரோஹித்: ஒருநாள் கிரிக்கெட் அணிக்குப் புதிய கேப்டன்

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவைத் தேர்வுக் குழு நியமித்துள்ளது.

News image
Updated On :8 டிசம்பர் 2021, 2:23 pm

DIN


இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவைத் தேர்வுக் குழு நியமித்துள்ளது.

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணியை வழிநடத்தி வந்த விராட் கோலி கடந்த டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் பொறுப்பிலிருந்தும் அவர் விலகினார்.

இதைத் தொடர்ந்து, டி20 கிரிக்கெட் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

எனினும், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு இரண்டு வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது திட்டங்கள் மற்றும் வியூகங்கள் வகுப்பதில் சிக்கலை உண்டாக்கும் என்ற பேச்சுகள் எழுந்து வந்தன. தென் ஆப்பிரிக்க பயணத்தின்போது ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு ரோஹித் சர்மாவே கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் சர்மாவையே தேர்வுக் குழு கேப்டனாக நியமித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.