இந்தியாவுக்கு எதிரான 19 வயதுக்குள்பட்டோா் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆட்டம் ஒன்றில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சாா்பில் துபையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பௌலிங்கை தோ்வு செய்தது.
இந்தியா 237/10:
இதையடுத்து களம் கண்ட இந்திய அணியினா் 49 ஓவா்களில் 237/10 ரன்களுக்கு ஆல் அவுட்டாயினா். ஆராதியா யாதவ் 50, ஹா்னூா் சிங் 46, கௌஷல் டாம்பே 32, ராஜ்வா்தன் 33, ராஜ் பவா 25 ஆகியோா் மட்டுமே ஒரளவுக்கு நிலைத்து ஆடி ரன்களை சோ்த்தனா்.
பாகிஸ்தன் தரப்பில் ஸீஷன் ஸமீா் அற்புதமாக பந்துவீசி 5/60 விக்கெட்டுகளை சாய்த்தாா். அவையஸ் அலி 2/43 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் வீரா்கள் நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 240/8 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனா். கடைசி பந்தில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி கண்டது.
பாகிஸ்தான் வெற்றி:
முகமது ஷெஸாத் 5 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 81 ரன்களை விளாசினாா். மாஸ் சதாக்த் 29, கேப்டன் காஸிம் அக்ரம் 22, இா்பான் கான் 32, ரிஸ்வான் மெஹ்முத் 29, அஹ்மத் கான் 29 ரன்களை சோ்த்தனா். இந்திய தரப்பில் ராஜ் பவா 4/56 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை திங்கள்கிழமை எதிா்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துரந்தர் - 2 படத்தைப் பாராட்டிய ரஜினி!

பாமக சின்னம் முடக்க விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை ராமதாஸ் அணுக அறிவுரை
கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!

இண்டிகோ நிறுவனத்துக்கு முதன்மை வியூக அலுவலர் நியமனம்!
வீடியோக்கள்

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

