கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இந்திய பந்துவீச்சுக்கு நெருக்கடி தரும் பேட்ஸ்மேன்கள்: தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 140/2

ஆடுகளம் எவ்வித பந்துவீச்சுக்கும் சாதகமாக இல்லாமல் பேட்ஸ்மேன்களுக்கு உதவுவதால் இருவரும்...

News image
Updated On :5 பிப்ரவரி 2021, 9:20 am

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்திய அணியை எதிா்கொள்கிறது. இரு அணிகளுமே வலுவான வீரா்களைக் கொண்டுள்ளதால் இந்த டெஸ்ட் தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அஸ்வின், பும்ரா மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். ஒரு டெஸ்ட் மட்டும் விளையாடியுள்ள வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். பும்ரா, கில், வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரும் இந்திய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் விளையாடுகிறார்கள். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது 100-வது டெஸ்டை விளையாடுகிறார்.

தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸும் டாம் சிப்லியும் இந்தியப் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார்கள். இதனால் 23 ஓவர்கள் வரை விக்கெட் விழவில்லை. 33 ரன்கள் எடுத்திருந்த பர்ன்ஸ், அஸ்வின் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று, ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய டான் லாரன்ஸை எல்பிடபிள்யூ முறையில் டக் அவுட் செய்தார் பும்ரா. இது இந்திய மண்ணில் பும்ரா எடுக்கும் முதல் டெஸ்ட். 

முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. சிப்லி 26, ரூட் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சிப்லியும் ரூட்டும் பிரமாதமாக விளையாடினார்கள். ஆடுகளம் எவ்வித பந்துவீச்சுக்கும் சாதகமாக இல்லாமல் பேட்ஸ்மேன்களுக்கு உதவுவதால் இருவரும் அதை நன்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். இதனால் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை விடவும் அஸ்வின் அதிக ஓவர்களை வீச வேண்டியிருந்தது. நிதானமாக விளையாடி வரும் சிப்லி, 159 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். 

இங்கிலாந்து அணி முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. சிப்லி 53, ரூட் 45 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.