மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெளிநாடுகளில் நாங்கள் எந்தப் புகாரும் தெரிவிப்பதில்லை: ஆடுகளம் சர்ச்சைக்கு அக்சர் பதில்

​ஆடுகளம் குறித்து பேசினால், வெளிநாடுகள் செல்லும்போது நாங்கள் எந்தப் புகாரும் தெரிவிப்பதில்லை என இந்திய அணியின் ஆல்-ரௌண்டர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 3:01 pm

DIN


ஆடுகளம் குறித்து பேசினால், வெளிநாடுகள் செல்லும்போது நாங்கள் எந்தப் புகாரும் தெரிவிப்பதில்லை என இந்திய அணியின் ஆல்-ரௌண்டர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-வது நாள் ஆட்டம் நிறைவடைந்த நிலையில் அக்சர் படேல் காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது:

"ஆடுகளம் குறித்து பேசினால், எந்த பந்தும் ஹெல்மட்டைத் தாக்கியதாகத் தெரியவில்லை. இயல்பாகவே பந்து சுழன்றது. நாங்களும் அதே ஆடுகளத்தில்தான் விளையாடி ரன் குவிக்கிறோம். அதனால், ஆடுகளம் இப்படி இருந்தது, அப்படி இருந்தது என யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருக்காது என நினைக்கிறேன். 

மேலும் நாங்கள் வெளிநாடுகள் செல்லும்போது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடும்போது புற்கள் நிறைய உள்ளன என்பதுபோன்ற புகார் அளித்ததில்லை. ஆடுகளம் குறித்து சிந்திப்பைத் தவிர்த்து சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் உள்ளது. அதனால், கூடுதலாக எதையும் செய்ய வேண்டும். 

பந்தை கைகளிலிருந்து மெதுவாக விடுவித்தால், மெதுவாக வீசும் பந்துவீச்சாளர்களுக்கு பெரிதளவில் உதவி இருக்காது. எனவே, சரியான வேகத்தில் பந்தை பிட்ச் செய்வது முக்கியம். அது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். பந்தை மெதுவாக வீசும்போது பேட்ஸ்மேன் கால்களைத் தகுந்தார்போல் நகர்த்தி எதிர்கொண்டு விடுவார்.

நாங்கள் விளையாடும்போது வெளி உலகத்தைப் பொருட்படுத்திக்கொள்ள மாட்டோம். நாங்கள் சாதாரண கிரிக்கெட்டைதான் விளையாடினோம். இது 4-வது நாளாக இருந்திருந்தால் டிக்ளேர் செய்வது குறித்து சிந்தித்திருப்போம். ஆனால், 3-வது நாள்தான் என்பதால் எங்களுக்குக் கூடுதல் நேரம் உள்ளது. எனவே கூடுதல் நேரம் பேட் செய்ய நினைத்தோம்.

நானும் அஸ்வினும் நிறைய கிரிக்கெட் ஒன்றாக விளையாடியுள்ளோம். மனநிலை குறித்து அவரிடமிருந்து நிறைய படித்துள்ளேன். நாங்கள் வெவ்வேறு விதமாக பந்துவீசுவதால் மனநிலை குறித்தும், பல்வேறு பேட்ஸ்மேன்களுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும்தான் பொதுவாக பேசுவோம்" என்றார் அஸ்வின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.