தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கரோனா பாதிப்பு: பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் புகார்!

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

News image
Updated On :12 ஜனவரி 2021, 7:47 am

DIN

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனினும் பரிசோதனை முடிவு குறித்த தனது சந்தேகத்தை சாய்னா நெவால் வெளிப்படுத்தியுள்ளார். 

தாய்லாந்தில் இரு சர்வதேச பாட்மிண்டன் போட்டிகள் நடைபெறுகின்றன. யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் போட்டி ஜனவரி 12 முதல் 17 வரையும், டோயோடா தாய்லாந்து ஓபன் போட்டி ஜனவரி 19 முதல் 24 வரையும் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்தின் பாங்காக்குக்குச் சென்றுள்ளார் இந்தியாவின் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால். கரோனா சூழல் காரணமாக பல்வேறு போட்டிகள் பாதிக்கப்பட்டதால் ஓய்விலிருந்த சிந்து, சாய்னா உள்ளிட்ட முக்கிய வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் விளையாட இருப்பது இது முதல் முறையாகும். 

இந்நிலையில் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சாய்னாவின் கணவரும் பாட்மிண்டன் வீரருமான காஷ்யப் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கரோனாவால் தான் பாதிக்கப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் சாய்னா நெவால். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நேற்று எடுத்த கரோனா பரிசோதனை முடிவு இன்னும் எனக்கு வழங்கப்படவில்லை. இதனால் குழப்பமாக உள்ளது. இன்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, நான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாங்காக்கில் உள்ள மருத்துவமனைப் போகச் சொன்னார்கள். விதிமுறையின்படி, பரிசோதனை மேற்கொண்ட ஐந்து மணி நேரத்துக்குள் முடிவு கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

எனினும் உலக பாட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்து போட்டியில் பங்கேற்க வந்த இரு இந்திய வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது. எனினும் மறுபரிசோதனையில் ஒரு இந்திய வீரருக்கு கரோனா இல்லை, அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என்று கூறியுள்ளது. 

மேலும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள வீரருடன் அறையில் ஒன்றாக தங்கியுள்ள மற்றொரு வீரர் இதன் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே இன்று அவர் பங்கேற்கவிருந்த ஆட்டத்திலிருந்து அவர் விலகியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இன்றைய ஆட்டத்திலிருந்து விலகியுள்ள வீரர்களின் பட்டியலில் சாய்னா நெவால், காஷ்யப் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் கரோனாவால் சாய்னா நெவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.