மும்பை அணியின் பயிற்சியாளராக அமோல் முசும்தார் தேர்வு
ஐபிஎல் போட்டியில் கடந்த மூன்று வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராகவும்


மும்பை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அமோல் முசும்தார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஜய் ஹசாரே போட்டியை வென்ற மும்பை அணியின் பயிற்சியாளராகவும் ரமேஷ் பவார் செயல்பட்டார். தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு விண்ணப்பங்களைக் கோரியிருந்தது மும்பை கிரிக்கெட் சங்கம்.
முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாஃபர், சைராஜ் பஹுதுலே, அமோல் முசும்தார் போன்ற பலரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார்கள்.
இந்நிலையில் அமோல் முசும்தார் மும்பை அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சி கோப்பையை 41 முறை வென்று சாதனை படைத்த மும்பை அணி, 2015-16-க்குப் பிறகு ரஞ்சி கோப்பையை வெல்லவில்லை. இதனால் ரஞ்சி கோப்பையை வெல்வதே முதல் லட்சியமாக இருக்கும் என முசும்தார் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் கடந்த மூன்று வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராகவும் 2019-ல் இந்தியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் முசும்தார் பணியாற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...