அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டன்க்லே அரைசதம்: இந்திய மகளிருக்கு நெருக்கடி

இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீராங்கனை சோபியா டன்க்லே அரைசதம் அடித்து நெருக்கடியளித்து வருகிறார்.

News image
படம்: டிவிட்டர் | பிசிசிஐ மகளிர்
Updated On :17 ஜூன் 2021, 12:50 pm

DIN


இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீராங்கனை சோபியா டன்க்லே அரைசதம் அடித்து நெருக்கடியளித்து வருகிறார்.

இந்திய மகளிர், இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரு டெஸ்ட் ஆட்டம் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. டன்க்லே 12 ரன்களுடனும், கேத்ரின் பிரண்ட் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரண்ட் 8 ரன்களுக்கு ஜுலான் கோஸ்வாமியிடம் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, டன்க்லேவுடன் சோபி எக்லெஸ்டோன் இணைந்தார். இந்த இணை இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியளித்தது. எக்லெஸ்டோன் நிதானம் காட்ட டன்க்லே ரன்களைக் குவித்து வந்தார்.

8-வது விக்கெட்டுக்கு இந்த இணை 56 ரன்கள் சேர்த்த நிலையில் எக்லெஸ்டோன் 17 ரன்களுக்கு தீப்தி சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். எனினும், அடுத்து களமிறங்கிய அன்யா ஷ்ருப்சோலும் ரன் குவிக்க மீண்டும் ஒரு பாட்னர்ஷிப் அமைந்தது.

2-ம் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. 

அரைசதம் அடித்த டன்க்ளே 66 ரன்களுடனும் ஷ்ருப்சோல் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.