நடாலைத் தொடர்ந்து பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், 4-வது சுற்றில் தோல்வியடைந்தார். இந்தத் தோல்வியினால் செரீனாவின் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான காத்திருப்பு மீண்டும் தொடர்கிறது. இதுவரை 23 பட்டங்களை வென்றுள்ள செரீனா, இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார். ஆனால் அந்த ஒரு பட்டத்துக்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்.
கடைசி நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளிலும் தோற்றுள்ளார் செரீனா. கடந்த வருடம் நடைபெற்ற யு.எஸ். ஓபன் போட்டியில் அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தார். காயத்தால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் முதல் சுற்றுக்குப் பிறகு வெளியேறினார். 2021 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் ஒசாகா, செரீனா வில்லியம்ஸை அரையிறுதியில் வீழ்த்தினார். இப்போது பிரெஞ்சு ஓபன் போட்டியில் 4-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாகப் பிரபல வீரர் நடால் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து செரீனா வில்லியம்ஸும் விலகியுள்ளார். இந்த முடிவை எடுப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒலிம்பிக் போட்டியில் விளையாட வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒலிம்பிக் போட்டிகள் எனக்கு அற்புதமான அமைந்துள்ளன. மன்னிக்கவும் என்று 39 வயது செரீனா கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை: அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவு மசோதா நகல் வெளியீடு!

திமுகவில் ஊழலுக்காக பதவி ராஜிநாமா! மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்!

ராத்து ராசன் பாடல்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


