தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஐபிஎல் ஆட்டங்கள் ஹைதராபாத்திலும் நடைபெற வேண்டும்: தெலங்கானா அமைச்சர் கோரிக்கை

ஐபிஎல் போட்டியின் ஆட்டங்கள் ஹைதராபாத்திலும் நடைபெற வேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2021, 5:39 am

DIN

ஐபிஎல் போட்டியின் ஆட்டங்கள் ஹைதராபாத்திலும் நடைபெற வேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர், தில்லி, மும்பை ஆகிய ஆறு நகரங்களில் மட்டும் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் ஆட்டங்களை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது. தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ், ட்விட்டரில் கூறியதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவின் பெருநகரங்களில் ஹைதராபாத்தில் தான் குறைந்தளவு கரோனா நோயாளிகள் உள்ளார்கள். ஐபிஎல் ஆட்டங்களை நடத்த மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறியுள்ளார். 

இதையடுத்து ஐபிஎல் ஆட்டங்களை ஹைதராபாத்திலும் நடத்த பிசிசிஐ முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் சார்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பங்கேற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.