47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவேனா? தோனி புதிய தகவல்

ஐபிஎல் 2022-இல் விளையாடுவது குறித்து முடிவெடுக்க இன்னும் நிறைய நேரம் இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி சனிக்கிழமை தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :20 நவம்பர் 2021, 11:29 am

DIN


ஐபிஎல் 2022-இல் விளையாடுவது குறித்து முடிவெடுக்க இன்னும் நிறைய நேரம் இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி சனிக்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி இதுபற்றி கூறியது:

"ஐபிஎல் 2022-இல் விளையாடுவது குறித்து ஆலோசிக்கவுள்ளேன். தற்போது நவம்பரில் உள்ளோம். ஐபிஎல் 2022 ஏப்ரலில்தான் நடைபெறும். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அவசரமாக முடிவெடுக்க வேண்டிய தேவையில்லை" என்றார் தோனி.

முன்னதாக, கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பை வென்று அசத்தியது. அப்போதும், அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து தோனி உறுதிபடத் தெரிவிக்கவில்லை. புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கவுள்ளதால், அதைப் பொறுத்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்பதையும் தோனி குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.