/

இலங்கை டி20 உலகக் கோப்பை அணி: புதிதாக 5 வீரர்கள் சேர்ப்பு

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இலங்கை அணியில் புதிதாக 5 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

News image
இலங்கை அணி வீரர்கள் (கோப்புப் படம்)
Updated On :28 ஜனவரி 2024, 4:17 am

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இலங்கை அணியில் புதிதாக 5 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இலங்கை அணியின் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அந்த அணியில் மேலும் புதிதாக 5 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். நிசான்கா, பனுகா, ஆஷன் பண்டாரா, லக்‌ஷன் சண்டகன், ரமேஷ் மெண்டிஸ் என இந்த 5 புதிய வீரர்களுடன் 23 பேர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்கள். இவர்களில் நான்கு பேர் மாற்று வீரர்கள். இலங்கை வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க இந்த 5 பேரும் தேர்வாகியுள்ளார்கள். முதலில் அணியில் இடம்பெற்ற லஹிரு மதுஷன்கா, காயம் காரணமாக விலகியுள்ளார். 

டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் நமிபியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் இலங்கை மோதவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.