அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சையத் முஷ்டாக் அலி: தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி அறிவிப்பு

லக்னௌவில் நடைபெறவுள்ள சையத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 அக்டோபர் 2021, 4:21 pm

DIN


லக்னௌவில் நடைபெறவுள்ள சையத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக் குழுவால் சையத் முஷ்டாக் அலிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் கேப்டனாகவும், விஜய் சங்கர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் 2-ம் பகுதியில் பங்கேற்காத வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் சேர்க்கப்படாத ஆல்-ரௌண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழக அணி:

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்), எம் எஸ் வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன், சந்தீப் எஸ் வாரியர், ஆர் சாய் கிஷோர், பி அபராஜித், என் ஜெகதீசன், எம் அஸ்வின், எம் ஷாருக் கான், சி ஹரி நிஷாந்த், எம் சித்தார்த், வி கங்கா ஸ்ரீலதர் ராஜு, எம் முகமது, ஜெ கௌசிக், ஆர் சஞ்சய் யாதவ், ஆர் சிலம்பரசன், ஆர் விவேக் ராஜ், பி சாய் சுதர்சன், பி சரவண குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.