அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சையத் முஷ்டாக் டி20: தினேஷ் கார்த்திக் விலகல், தமிழக அணியின் புதிய கேப்டன் யார்?

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமல்லாமல் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் விலகியுள்ளார்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:12 am

DIN


சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. தமிழக அணி எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. லீக் ஆட்டங்கள் அனைத்தையும் லக்னெளவில் விளையாடுகிறது. 

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமல்லாமல் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் விலகியுள்ளார்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் இறுதிச்சுற்றிலேயே ஊசி செலுத்திக்கொண்ட பிறகு தான் விளையாடினார். எனவே சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக விஜய் சங்கர் தமிழக அணியின் கேப்டனாகச் செயல்படுவார் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராமசாமி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.