மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் அஸ்வின்: உணர்வுபூர்வமான பதிவு

வெளிச்சத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும் மட்டுமே அதைக் காண வாய்ப்பு கிடைக்கும். 

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:31 am

DIN

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான அணிகளைப் பல்வேறு நாடுகளும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். கடைசியாக ஜூலை 2017-ல் மேற்கிந்தியத் தீவுகளில் டி20 ஆட்டத்தில் அஸ்வின் விளையாடினார். அதன்பிறகு இந்திய அணி விளையாடிய 63 டி20 ஆட்டங்களில் அவர் இடம்பெறவில்லை. 

டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வான பிறகு ட்விட்டரில் அஸ்வின் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு சுரங்கப்பாதையின் முடிவிலும் வெளிச்சம் இருக்கும். ஆனால் சுரங்கத்தில் உள்ளவர்களுக்கும் வெளிச்சத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும் மட்டுமே அதைக் காண வாய்ப்பு கிடைக்கும். 

2017: இந்த வாக்கியத்தை என்னுடைய அறைச் சுவற்றில் எழுதும் முன்பு, என்னுடைய நாட்குறிப்பில் பல லட்சம் முறை எழுதியிருப்பேன். நாம் படித்து வியக்கும் மேற்கோள்களை நாம் உள்வாங்கி அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும்போது அவற்றுக்கு அதிக சக்தி உண்டு. 

மகிழ்ச்சியும் நன்றியும் தான் தற்போது என்னை வெளிப்படுத்துகின்றன என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.