மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிஎஸ்கே வீரர்கள் பயணிகள் விமானத்தில் பயணம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் (சிஎஸ்கே) மான்செஸ்டரிலிருந்து பயணிகள் விமானம் மூலம் துபைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :10 செப்டம்பர் 2021, 2:28 pm

DIN


சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் (சிஎஸ்கே) மான்செஸ்டரிலிருந்து பயணிகள் விமானம் மூலம் துபைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கவிருந்த கடைசி டெஸ்ட் ஆட்டம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்திலுள்ள சிஎஸ்கே வீரர்களை துபைக்கு அழைத்து வரும் முயற்சியில் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. ரவீந்திர ஜடேஜா, சேத்தேஷ்வர் புஜாரா, ஷர்துல் தாக்குர், மொயீன் அலி மற்றும் சாம் கரண் ஆகியோர் இங்கிலாந்தில் உள்ளனர்.

இதுபற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது:

"தனி விமானம் என்பது இனிமேல் சாத்தியமில்லை. பயணிகள் விமானத்தில் நாளை டிக்கெட் வாங்க முயற்சித்து வருகிறோம். அவர்கள் துபை வந்து இறங்கியவுடன் மற்ற வீரர்களைப் போல தனிமைப்படுத்தப்படுவார்கள்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.