இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

துணை கேப்டனாக இந்த வீரரைத் தேர்வு செய்யலாம்: கவாஸ்கர்

ஐபிஎல் போட்டியிலும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் திறமையை நன்கு வெளிப்படுத்துகிறார்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 12:00 pm

DIN

கே.எல். ராகுலை துணை கேப்டனாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று அறிவித்தார். 

பிரபல பேட்ஸ்மேனான விராட் கோலி, இந்திய அணியின் கேப்டனாக நீடித்து வருகிறார். எனினும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையையும் அவரால் வெல்ல முடியவில்லை. இதனால் ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகளை வழிநடத்த டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இந்திய அணிக்காகத் தொடர்ந்து என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன் என்று கோலி கூறியுள்ளார். 

இந்நிலையில் டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகுவது பற்றி ஒரு பேட்டியில் முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:

எதிர்காலத் திட்டத்துடன் பிசிசிஐ செயல்படுவது நல்ல விஷயம். புதிய கேப்டனை உருவாக்க எண்ணினால் கே.எல். ராகுலைப் பரிசீலனை செய்யலாம். அவர் நன்றாக விளையாடி வருகிறார். இங்கிலாந்திலும் அவருடைய பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஐபிஎல் போட்டியிலும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் திறமையை நன்கு வெளிப்படுத்துகிறார். எனவே அவரை துணை கேப்டனாக அறிவிக்கலாம் என்று கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.