டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் மொயீன் அலி: தகவல்
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்டுகள், 112 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார் மொயீன் அலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2914 ரன்களும் 195 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் மொயீன் அலி, டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற மொயீன் அலி முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரில் தன்னால் பங்கேற்க முடியாது என்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமில்லை என்றும் இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மற்றும் கேப்டன் ஜோ ரூட்டிடம் மொயீன் அலி தகவல் தெரிவித்துவிட்டதாகவும் அறியப்படுகிறது. எனினும் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள், டி20 ஆட்டங்களில் தொடர்ந்து விளையாட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மொயீன் அலி விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...