தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாகிஸ்தானுக்கு இருமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நியூசிலாந்து அணி

மார்ச் 2022 முதல் ஏப்ரல் 2023 வரை பாகிஸ்தானில் 8 டெஸ்டுகள், 11 ஒருநாள், 13 டி20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

News image
நியூசிலாந்து அணி
Updated On :20 டிசம்பர் 2021, 5:21 am

DIN

அடுத்த இரு வருடங்களில் பாகிஸ்தானுக்கு இருமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டுக் கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு வந்தது நியூசிலாந்து அணி. 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்வதால் இந்தத் தொடர் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஒருநாள் ஆட்டங்கள் ராவல்பிண்டியிலும் டி20 தொடர் லாகூரிலும் நடைபெறவிருந்தன. முதல் ஒருநாள் ஆட்டம் செப்டம்பர் 17 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை, ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அசாதாரணமான சூழல் நிலவியது. பாகிஸ்தானில் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தொடர் ரத்தானது குறித்து அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். 

இந்நிலையில் அடுத்த இரு வருடங்களில் பாகிஸ்தானுக்கு இருமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது நியூசிலாந்து அணி. 2022-23-ல் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதன்பிறகுக் கடந்த செப்டம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள், டி20 தொடர்களை 2023 ஏப்ரலில் விளையாடவுள்ளது. அப்போது 5 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் இரு அணிகளும் விளையாடவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மார்ச் 2022 முதல் ஏப்ரல் 2023 வரை பாகிஸ்தானில் 8 டெஸ்டுகள், 11 ஒருநாள், 13 டி20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் இந்தத் தொடர்களில் பங்கேற்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.