சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

வெளிநாடுகளில் குறைந்த டெஸ்டுகளில் 100 விக்கெட்டுகள்: பும்ரா புதிய சாதனை

28 வயது பும்ரா, 2018-ல் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். 

News image
Updated On :31 டிசம்பர் 2021, 5:10 am

வெளிநாடுகளில் குறைந்த டெஸ்டுகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

செஞ்சுரியன் டெஸ்டில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அற்புதமாகப் பந்துவீசினார். முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை எடுத்த பும்ரா, 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து வெளிநாடுகளில் குறைந்த டெஸ்டுகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். 28 வயது பும்ரா, 2018-ல் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். 

வெளிநாட்டில் குறைந்த டெஸ்டுகளில் 100 விக்கெட்டுகள் எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர்கள்

பும்ரா - 23 டெஸ்டுகள்
சந்திரசேகர் - 25 டெஸ்டுகள்
அஸ்வின் - 26 டெஸ்டுகள்
பிஷன் பேடி - 28 டெஸ்டுகள்
ஸ்ரீநாத் - 28 டெஸ்டுகள்
ஷமி - 28 டெஸ்டுகள்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.