சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நியூசிலாந்து தொடருக்குப் பயிற்சியாளராகும் ராகுல் டிராவிட்

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாடுகிறது...

News image
Updated On :14 அக்டோபர் 2021, 9:48 am

DIN


நவம்பர் மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாடுகிறது.

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று முடிந்த மூன்று நாள்கள் கழித்து இந்தியாவில் நவம்பர் 17-ல் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 25 அன்று தொடங்குகிறது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக ரவி சாஸ்திரி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து புதிய பயிற்சியாளரைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது பிசிசிஐ. 

முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய ஜூனியர், இந்திய ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்தார். 2019-ல் பெங்களூரில் உள்ள பிசிசிஐயின் நேஷனல் கிரிக்கெட் அகாதமியின் (என்.சி.ஏ.) தலைவராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் இலங்கைக்குச் சென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டார். முழு நேரப் பயிற்சியாளராகப் பணியாற்ற அவருக்குத் தயக்கம் இருப்பதால் நியூசிலாந்து தொடருக்கு மட்டும் டிராவிடை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்குப் பிறகு முழு நேரப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.