
மாநிலங்களவை நியமன எம்.பி.யும், தடகள வீராங்கனையுமான பி.டி. உஷாவுடன் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் எடுத்துக் கொண்ட சுயபடம் வைரலாகி வருகின்றது.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஹர்பஜன் சிங்கும், குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.டி.உஷாவும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், இன்றைய மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்ற ஹர்பஜன் சிங், நாடாளுமன்ற வளாகத்தில் பி.டி. உஷாவுடன் சுயபடம் எடுத்துக் கொண்டார்.
இந்தப் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.