கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அதிக டி20 வெற்றிகள்: உலக சாதனை படைப்பாரா ரோஹித் சர்மா?

இதுவரை 36 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா...

News image
Updated On :30 ஆகஸ்ட் 2022, 12:07 pm

DIN

டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் யார்?

இங்கிலாந்தின் இயன் மார்கன் மற்றும் ஆப்கானிஸ்தானின் அஸ்கர் ஆப்கன். இருவரும் தலா 42 வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். தோனி 2-ம் இடத்தில். 41 வெற்றிகள். 

2017 முதல் டி20 கேப்டனாக அவ்வப்போது செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா தற்போது முழு நேர கேப்டனாக உள்ளார். சமீபகாலமாக டி20 ஆட்டங்களில் அதிக வெற்றிகளைப் பெற்று வருகிறார். இதுவரை 36 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா 30 வெற்றிகளைப் பெற்றுள்ளார். வெற்றி சதவீதம் - 83.33%. ரோஹித் சர்மா போல குறைந்தது 36 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த யாருக்கும் இந்தளவுக்கு வெற்றி சதவீதம் கிடையாது. 

இயன் மார்கன், அஸ்கர் ஆப்கனின் சாதனைகளைத் தொட ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 13 வெற்றிகளே தேவை. இந்த வருடம் மீதமுள்ள 13 வெற்றிகளையும் அடைந்து சாதிப்பார் என நம்பலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.